வெள்ளத்தில் சிக்குண்ட நிலையிலும் காரின் மேல் பகுதியில் இருந்தவாறே தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட சம்பவம் சீனாவில் குவென்சி பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் குறித்த பகுதியில் பல வாரங்களாக தொடர்ந்து பெய்து வந்த அடைமழையினால் வெள்ளம் ஏற்பட்டு வீதிகள் அனைத்தும் நீரினுள் மூழ்கியுள்ளன.

குறித்த வெள்ளப்பெருக்கினால் 50 மில்லியன் யுவான் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காரின் மேல் பகுதியில் ஏறி தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தவாறே தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.