(இரா­ஜ­துறை ஹஷான்)

யுத்­தக் ­குற்­றச்­சாட்­டுக்கள்  தொடர்பில் கிடைக்கப் பெற்ற  நம்­பிக்­கை­யான ஆவ­ணங்­களைக் கொண்டே இரா­ணு­வத் ­த­ள­ப­திக்கு அமெ­ரிக்­காவுக்குள் நுழைய  தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்கா குறிப்­பி­டு­வது இரா­ஜ­தந்­திர ரீதி­யான செயற்­பா­டல்ல. இவ்­வி­டயம் தொடர்பில் அமெ­ரிக்கா முறை­யான பேச்­சு­வார்த்­தை­களை   முன்­னெ­டுக்­க­வில்லை என்று அர­சாங்க பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

இரா­ணுவ  தள­பதி  சவேந்­திர சில்­வா­விற்கு  விதிக்­கப்­பட்­டுள்ள பய­ணத்­தடை தொடர்பில்  கருத்­து­ரைக்­கை­யிலே  அவர் மேற்­கண்­ட­வாறு   குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், 

 அமெ­ரிக்கா  இரா­ணுவ  தள­ப­திக்கு  அந்­நாட்­டுக்குள்  பிர­வே­சிப்­ப­தற்கு  தடை விதித்­துள்­ள­மை­யா­னது இரா­ஜ­தந்­திர மட்­டத்தில்  முன்­னெ­டுக்­கப்­பட்ட  தீர்­மா­ன­மல்ல. இவ்­வா­றான  நிலையில் இரு நாடு­களும்  இரா­ஜ­தந்­திர  மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க வேண்டும். ஆனால் அமெ­ரிக்கா  இவ்­வி­டயம் குறித்து எவ்­வித பேச்­சு­வார்த்­தை­க­ளையும் அர­சாங்­கத்­துடன்  முன்­னெ­டுக்­க­வில்லை.

யுத்­தக்­குற்­ற­சாட்­டுக்கள்  தொடர்பில்   கிடைக்கப் பெற்ற  நம்­பிக்­கை­யான  தக­வல்­களை  அடிப்­ப­டை­யாகக் கொண்டே  பய­ணத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ளன என்று அமெ­ரிக்கா குறிப்­பி­டு­கின்­றது. அவ்­வா­றாயின் அந்த ஆவ­ணங்கள் தொடர்பில்  அர­சாங்­கத்­துடன் இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும் என்றார்.

இவ்­வி­டயம் குறித்து இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­த­யாப்பா அபே­வர்­தன கருத்துத் தெரி­விக்­கையில்,

யுத்­தத்தை வெற்­றிக்­கொண்­ட­வர்­க­ளுக்கு  எதி­ராக  செயற்­ப­டு­வது  இலங்கை  நாட்டை அவ­திப்­ப­தா­கவே  கருத முடியும். பல்­வேறு  தேவை­களை  கருத்திற்   கொண்டு  ஒரு­த­லைப்­பட்­ச­மாக செயற்­பட முடி­யாது.  நாட்­டுக்கு  எதி­ரான   அச்சுறுத்தல்கள் நிறைவுபெறவில்லை என்பதற்கு    இராணுவ தபளதிக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க  பயண  தடை ஒரு  சாட்சி.  இவ்வாறான  நெருக்கடியினை  வெற்றி கொள்ள   பலமாக அரசாங்கம்  பொதுத்தேர்தலை தொடர்ந்து தோற்றம் பெற வேண்டும் என்றார்.