அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்காலை குற்றவியல் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் அம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25 வயதுடைய, மீடியாகொட பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த நபரை அம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அம்பலாங்கொடை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக குறித்த சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.