விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு அமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14.02.2020) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டில் உக்ரேனிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு நான்கு மிக் 27 விமானங்களை வாங்கியது தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக உதயங்க வீரதுங்க சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகள் பண மோசடி சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதிக் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் தொடங்கப்பட்டன.

பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியது தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் இன்டர்போல் ஆகியோரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.