யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து பெரும்பாலும் அமெரிக்கர்களை உள்ளடக்கிய 300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை தனது சிறப்பு விமானங்களினூடாக அமெரிக்கா தனது நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி டோக்கியோவில் தரையிறங்கிய இரண்டு சிறப்பு அமெரிக்க விமானங்ளின்  மூலமாக இவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

குறித்த நபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதும் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள இராணுவ தளங்களில் அவர்களை தனிமைப்படுத்தி வைத்திய கண்காணிப்பில் வைக்கவும், விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரின்சஸ் டயமண்ட் கப்பலில் மொத்தமாக 3700 பேர் சிக்கியிருந்தனர்.

இவர்களில் 356 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

photo credit : cnn