இன்று காலை துப்பாக்கிப் பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பலபிட்டிய, வெலிவத்துகொட பகுதியிலேயே இன்று காலை 7  இத்துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய சுனில் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.