கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர்  நிரூபா அவர்களின்  "இடாவேணி நூல் அறிமுகமும் உரையாடலும்" 14 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நூல் பற்றிய  அறிமுகத்தை  சுரேகா பரம்  , கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையில் மதுஷா மாதங்கி வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ்  அவர்களும் நிகழ்த்தினார்கள்.

இவ் நிகழ்வில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்புலம்பெயர் இலக்கியவாதிகள்,  இலக்கிய  ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர்.  

இதன் போது சுனைக்குது, அச்சாப்பிள்ளை  ஆகிய இவரது முன்னைய படைப்புக்கள் நிகழ்வில்  காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதிய கோணங்களில் பெண் எழுத்துக்களும் வாசிப்புக்களும் பெருக வேண்டிய அவசியத்தைப் பறைசாற்றுவதாகவும்  நிகழ்வு  அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.