லண்டனின் சுரங்கப்பாதையில் சாம் ரவுலி என்பவர் எடுத்த இரண்டு எலிகள் சண்டையிடும் ஒரு புகைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

(Image credit: Sam Rowley/Wildlife Photographer of the Year)

சாம் ரவுலி எலிகளை புகைப்படம் எடுப்பதற்காக ஐந்து நாட்களாக சுரங்கப்பாதையில் காத்திருந்துள்ளார்.

ஒரு நாள்  இரவில் ஒரு பயணியிடமிருந்து உணவு கீழே விழ , ஒரு சிறு துளி உணவுக்காக இரு சுண்டெலிகள் சண்டை போடும் காட்சியை அற்புதமாக படம்  பிடித்துள்ளார்.

அவருடைய பொறுமைக்கும் அவரது சிறந்த புகைப்படத்துக்கும் லுமிக்ஸ் பீப்பிள்ஸ் சாய்ஸில் (LUMIX People's Choice Award) 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படம் (Wildlife Photographer of the year)  எனும் விருது கிடைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட 48,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்களிலிருந்து இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 புகைப்படங்களின் குறுகிய பட்டியலிலிருந்து சாம் ரவுலியின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் மே மாதம் 31 ஆம் திகதி வரை  லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்  நடைபெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் கண்காட்சியில் காண்பிக்கப்படும்.

பட்டியலிடப்பட்ட 25 படங்களை கீழே காணலாம்.