கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இலங்கைக்கும் அந்நாட்டுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற பொருளாதார உதவிகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பொருளாதார உறவுகள் மீது கொரோனா வைரஸ் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.