(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முகவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னை பணித்துள்ளதாக ஹஜ்குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

ஹஜ் விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஹஜ் கடமையை பிரதமரின் நேரடி வழிகாட்டலின் கீழ் வழிநடாத்த திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.