‘வட்ஸ் அப்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 200 கோடியை எட்டியதையடுத்து  புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

   சமூகவளைத்தளமான ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு உள்வாங்கியது. , 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 100 கோடி பேர் வட்ஸ்-அப்’  செயலியை பயன்படுத்தியுள்ளனர். 

   அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை, 150 கோடியாக உயர்ந்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

   இதன்மூலம், சமூக ஊடகத் தளங்களில் 'வட்ஸ் அப்'  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக், 250 கோடி தீவிரப் பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 

   வாட்ஸ் அப் செயலியில் அனுப்பப்படும் தகவல்களைப் பாதுகாப்பதற்காகத் உடைக்க முடியாத ‘டிஜிட்டல் லொக்’  செயற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்கள் அதிகரிப்பது போன்று அதன் பாதுகாப்பும் மிக முக்கியமானது என தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம் இத குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,  

உங்கள் உரையாடல்கள் மற்றும் தகவல்கள்  உங்கள் தொலைபேசியில் மட்டுமே வைக்கப்படுகின்றன, இடையில் யாரும் உங்கள் செய்திகளைப் படிக்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது, எங்களால்  கூட முடியாது. உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் உங்களுக்கு இடையில் மட்டுமே இருக்கும். 

இதன்மூலம், ஹேக்கர்களிடமிருந்து உங்கள் தகவல்களை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.