2008 இல் SLIIT இன் பொறியியல் பீடம் பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கற்கைகளை வழங்குவதன் மூலமாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. 

2013 இல், பிரித்தானியாவின் பெருமைக்குரிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தரப்படுத்தலை பெற்றுக்கொண்ட முதலாவது கல்வியகம் எனும் பெருமையை SLIIT பெற்றுக் கொண்டது. 

இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் நான்கு கற்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் சிவில் பொறியியல் கற்கைகள், இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், எந்திரவியல் பொறியியல் மற்றும் எந்திரவியல் பொறியியல் (மெக்ட்ரோனிக்ஸ் விசேடத்துவம்) ஆகியன அடங்கியுள்ளன. 

அதே ஆண்டில், அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்துடன் பொறியியல் கற்கைகளுக்கான பங்காண்மையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த பங்காண்மையின் ஊடாக இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்கான கற்கைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு SLIIT ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அல்லது இறுதி இரு ஆண்டுகளுக்காக அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்துக்கு மாறிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போது SLIIT இன் பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு கேர்டின் பல்கலைக்கழகம் அல்லது ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. 

மேலும், இந்த ஆண்டு, SLIIT இன் பொறியியல் பிரிவுக்கு MPhil மற்றும் PhD வரை செல்லக்கூடிய பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

SLIIT இன் பொறியியல் பீடத்தின் தலைமைப் பொறுப்பை பேராசிரியர் சமன் திலகசிரி வகித்து வருகிறார். 60 க்கும் அதிகமான முழு நேர கல்சார் ஊழியர்களின் உதவிகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் 25 பேருக்கும் அதிகமானோர் பொறியியல் துறையில் PhD பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியர். சமன் திலகசிரி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி என்பதுடன், ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் ஆவார். 

சிவில் பொறியியல் துறையில் முதன்மை நிலையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதுடன், புவித்தொழில்நுட்ப பொறியியல் துறையில் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. லண்டன் நகரில் அமைந்துள்ள இம்பீரியல் கல்லூரியில் MSc கற்கையை பூர்த்தி செய்வதற்கு பெருமைக்குரிய பொதுநலவாய புலமைப் பரிசில் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பல முக்கிய தகைமைகளை தன்னகத்தே கொண்டுள்ள பேராசிரியர் சமன் திலகசிரி, ஜனாதிபதியின் 2010 ஆம் ஆண்டு “மிகச்சிறந்த ஆய்வுகளுக்கான சாதனை விருது” என்பதையும் 2007 – 2012 காலப்பகுதியில் மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து தனதாக்கியிருந்தார். 

2004 இல் இலங்கை பொறியியலாளர் கல்வியகத்திடமிருந்து உரிமைத்துவத்தையும் பெற்றிருந்தார். 2007 ஆம் ஆண்டு இலங்கை பொறியியலாளர் கல்வியகத்திடமிருந்து சர்வதேச நிபுணத்துவ பொறியியலாளர் நிலையையும் பெற்றிருந்தார். 

இதன் மூலம் 2009 ஆம் ஆண்டு இதே கல்வியகத்தின் ஆய்வாளாராக இணைந்து கொண்டதுடன்,  2015 இல் இலங்கை புவித்தொழில்நுட்ப சமூகத்தின் உப தலைவராகவும் இணைந்து கொண்டார். இவர் 50க்கும் அதிகமான ஆய்வு பத்திரங்களை தயாரித்துள்ளதுடன், புவித்தொழில்நுட்ப பொறியியல் தொடர்பில் இரு புத்தகங்களையும் தயாரித்துள்ளார். 

இல் இவருக்கு பொதுநலவாய ஆய்வு அங்கத்துவம் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வழங்கப்பட்டிருந்தது. 2010 இல் இவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து மெல்பேர்ன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக பெருமுயற்சி ஆய்வு ஊதியம் வழங்கப்பட்டிருந்தது.