(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி அன்னம்  சின்னத்தில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களே  அதிகம் காணப்படுவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நளை கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத  காரணிகளினால் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை  கூடுவதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளது.    

மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நாளைமறுதினம்  சுமுகமான தீர்வு  எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர்  சஜித்  பிரேமதாஸ  தலைமையில் பலமான கூட்டணி  தோற்றம் பெறும்.  அனைத்து  பங்காளி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்று  பலமான அரசாங்கத்தை  எம்மால் ஸ்தாபிக்க முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.