அம்பாந்தோட்டை - புந்தல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கைத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வன பாதுகாப்பு திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் இவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி கைது செய்யப்பட்டு அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேக நபரிடமிருந்து டீ 56 ரக கைக்துப்பாக்கி, வெடிமருந்துகள் , மெகசின் துப்பாக்கி, ரிப்பீட்டர் ரக துப்பாக்கி , வெவ்வேறு வெடி மருந்துகள் 400 கிராம், 9 எம்.எம்.ரக ரவைகள் 3, கத்திகள் 2 மற்றும் கைவிலங்கு சோடி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தெபரவௌ - திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.