குசல் மெண்டிஸின் துடுப்பாட்டம் மற்றும் ரங்கன ஹேரத்தின் சகலதுறை பங்களிப்பு என்பன இலங்கை அணியின் உத்வேகத்தை அதிகரித்துள்ளதென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

உண்மையில் ஹேரத் சிறந்தவொரு வீரர். 38 வயதாகின்ற போதும் அவரது திறமை வீரர்களுக்கும் அணிக்கும் சிறந்தவொரு உத்வேகத்தை அளிக்கின்றது.

இங்கிலாந்திற்கெதிரான டெஸ்ட் தொடரின் போது 7 விக்கட்டுக்களை கைப்பற்றியதோடு, துடுப்பாட்டத்தில் 109 ஓட்டங்களை பெற்று தனது சகலதுறை திறமையை வெளிக்காட்டினார்.

கலத்தடுப்பிலும் அவரது செயற்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. ஹேரத்  துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் கலத்தடுப்பு என்பவற்றில் தனது திறமையை மேலும் வழுப்படுத்தியுள்ளார் என தெரிவித்தார்.