சவுதி - ஐக்கிய அரபு எமிரேட் தலைமையிலான இராணுவக் கூட்டணி யேமனில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 31 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக யேமனின் ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் வடக்கு அல்-ஜாவ்ஃப் மாகாணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி போராளிகள் சவுதி போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக வெளியோன செய்திகளைத் தொடர்நது சில மணி நேரங்களின் பின்னரே இந்த வான்வழித் தாக்குதலானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்று ஹவுத்தி போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவளை காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் விரைவாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

photo credit : aljazeera