க.பொ.த. சாதா­ர­ண­தரம், க.பொ.த. உயர்­தரம் மற்றும் தரம் 05 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை ஆகி­ய­வற்­றுக்­கான விண்­ணப்­பங்­களை இணை­ய­வழி மூலம் கோர பரீட்­சைகள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

டிஜிட்டல் மயப்­ப­டுத்­தலை நோக்­காக கொண்டு இந்­ந­ட­வ­டிக்­கையை எடுத்­துள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

புதிய முறையின் கீழ் தரம் 05புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு விண்­ணப்­பிக்கும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் தனிப்­பட்ட இலக்கம் வழங்­கப்­படும் என்­ப­தோடு, குறித்த இலக்கம் பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் தர­வுத்­த­ளத்­துடன்  இணைக்­கப்­படும் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரி­வித்­துள்ளார்.

மாண­வர்­களின் பரீட்சைப் பெறு­பே­றுகள் மற்றும் இணைப்பாட விதான நட­வ­டிக்­கைகள் போன்ற விட­யங்கள் தொடர்­பாக தனிப்­பட்ட மாணவர் இலக்­க­மா­னது, மாணவர் தர­வுத்­த­ளத்­துடன் இணைக்­கப்­படும் என்­ப­தோடு  இதன் மூலம் இல­கு­வாக  மாண­வர்­களை  அடை­யாளம் கண்­டு­கொள்ள முடியும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு க.பொ.த. உயர்­தரப் பாடங்­க­ளான  கணக்­கியல்  ,உயி­ரியல், தொழில்­நுட்பம், பொறி­யியல் தொழில்­நுட்பம் ,தொழில்­நுட்பம் மற்றும் விஞ்­ஞானம் ஆகி­ய­வற்­றுக்கு சிக்­க­லான கணிப்­பு­களை மேற்­கொள்­ள­மு­டி­யாத கணிப்பான்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.