இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிரான பயண தடை குறித்த தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்திப்பார் எனவும் பயணதடை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை இந்த விடயத்திற்கு இலங்கை வழங்குகின்ற முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துவதாக  இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்