இழு­பறி நிலையில் 1000 ரூபா சம்­பள உயர்வு: விடா முயற்­சியில் அரசு என்­கிறார் இரா­ஜாங்க அமைச்சர்

Published By: J.G.Stephan

16 Feb, 2020 | 12:33 PM
image

(எம்.மனோ­சித்ரா)

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா நாளாந்த சம்­ப­ளத்தை வழங்­கு­வதில் தோட்ட உரி­மை­யா­ளர்கள் எதிர்ப்­புக்­களை தெரி­வித்து வரு­கின்ற நிலையில், மார்ச் முதலாம் திக­தி­யி­லி­ருந்து சம்­ப­ளத்தை அதி­க­ரித்து கொடுப்­பதில் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் அர­சாங்கம் இந்த விட­யத்தில் விடாமுயற்­சி­யுடன் செயற்­பட்டு வரு­வ­தாக அர­சாங்க பேச்­சா­ளரும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மற்றும் மின்­சக்தி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்­பளம் வழங்­கு­வது தொடர்பில் முத்­த­ரப்பு உடன்­ப­டிக்கை 13 ஆம் திகதி புதன்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் செவ்­வாய்க்­கி­ழமை மாலை திடீ­ரென ஒப்­பந்த கைச்­சாத்து ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் மார்ச் முதலாம் திகதி முதல் அர­சாங்­கத்தால் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட படி சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­டுமா என்­பது தொடர்­பிலும், மீண்டும் ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான தினம் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளதா என்­பது தொடர்­பிலும் வின­விய போதே இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் , பெருந்­தோட்டக் கம்­ப­னி­களின் பிர­தி­நி­திகள் , அர­சாங்க தரப்­பினர் என மூன்று தரப்­பு­களும் இவ் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­ட­வி­ருந்­தன. எனினும் சில கம்­ப­னிகள் முரண்­பட்ட கருத்­துக்­களை தெரி­வித்­ததன் கார­ண­மா­கவே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வது ஒத்தி வைக்­கப்­பட்­டது. எவ்­வா­றி­ருப்­பினும் மார்ச் முதலாம் திக­திக்கு முன்னர் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யான நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கி­றது.

வியா­ழக்­கி­ழ­மையும் இவ்­வி­டயம் தொடர்பில் தோட்ட உரி­மை­யா­ளர்­களை சந்­தித்து பேசி­யி­ருந்தோம். மீண்டும் அடுத்த வாரத்தில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நிச்சயம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். அத்தோடு திட்டமிட்டபடி மார்ச் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். இதில் யாரும் கலவரமடையத் தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13