ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப் பூர்வ டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமாக டுவிட்டர் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பு மூலமாக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கணக்குகள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்ததும், நாங்கள் குறித்த கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைத்ததாகவும், எவ்வாறெனினும் அவற்றை மீட்டெடுக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் நேற்றைய தினம் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த  இரண்டு மாதங்களில் பேஸ்புக் மற்றும் தேசிய கால்பந்து லீக் (NFL) அணிகளின் பல கணக்குகள் உட்பட இணையதளத்தில் பல உயர் கணக்குகளும் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.