ஆர்.பி

கொரோனா வைரஸ் ஓர் உயி­ரியல் ஆயு­தமா? அது சீனாவால் உரு­வாக்­கப்­பட்­டதா? அல்­லது சீனாவில் உரு­வா­னதா? இன்றேல் வுஹான் ஆய்வு கூடத்­தி­லி­ருந்தும் தப்­பிய வைரஸால் கொரோனா உரு­வா­னதா? என பல்­வேறு கோணங்­களில் கேள்­வி­களும் குற்­றச்­சாட்­டு­களும் எழுந்­துள்ள நிலையில்,  இதன் உண்மைத் தன்மை குறித்து சர்­வ­தேச தொலைக்­காட்சி சேவை ஒன்று ஆய்­வொன்றை மேற்­கொண்­டது.

அதில் கூறப்­பட்ட கருத்­துக்கள் வரு­மாறு: பிரித்­தா­னிய பத்­தி­ரி­கை­யான டெய்லி மெயில் பத்­தி­ரி­கையே கொரேனா வைரஸ் ஆய்வு கூட­மொன்­றி­லி­ருந்து வெளி­யா­ன­தாக  தக­வ­லொன்றை முதலில் வெளி­யிட்­டது. அதில் சீனா வுஹானில் சார்ஸ் மற்றும் இபோலா மற்றும் கொடிய வைர­ஸூகள் தொடர்பில் ஆராய ஆய்வு கூட­மொன்றை நிறு­வி­யது. இந்­நி­லையில் 2017 ஆம் ஆண்டு அதி­லி­ருந்தும் தப்­பிய வைரஸ் இதற்­கான முக்­கிய கார­ண­மாக இருக்­க­லா­மென அமெ­ரிக்க பாது­காப்பு ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

குறித்த ஆய்வு கூட­மா­னது வுஹான் மாகா­ணத்தில் அமைந்­துள்ள விலங்­குகள் சந்­தைக்கு மிகவும் அணித்­தா­ன­தாகும். அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு கூடத்தில் இருந்தும் தப்பி விலங்­குகள் சந்­தைக்கு பர­வி­யி­ருக்­க­லா­மென மேற்­படி பத்­தி­ரிகை  சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. சார்ஸ் வைரஸூம் இதே போன்று ஆய்வு கூடத்­தி­லி­ருந்து தப்­பிய வைரஸால் பரப்­பப்­பட்­ட­தாக அப்­பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இதே­வேளை, வொஷிங்டன் டைம்ஸ் என்ற பத்­தி­ரிகை ஒரு­படி மேலாகச் சென்று  கொரோனா வைரஸ் ஆய்வு கூட­மொன்றில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க­லா­மென்றும் இந்த தகவல் உயி­ரியல் ஆய்­வாளர் ஒரு­வ­ரினால் அறி­வி்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. இவை­யெல்லாம் ஊகத்தின் அடிப்­ப­டை­யி­லான தக­வல்­க­ளா­கவே உள்­ளன என குறித்த பத்­தி­ரி­கைகள் தெரி­வித்­துள்­ளன.

மேலும்,  இந்த வைரஸ் கன­டாவி்ல் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் இரண்டு சீன முக­வர்கள் கன­டா­வி­லி­ருந்தும் கொரோனா வைரஸை சீனா­வுக்குள் கடத்­தி­ய­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அத்­துடன் ஊட­க­மொன்று வுஹான் தேசிய உயி­ரியல்  பாது­காப்பு ஆய்வு கூடத்தில் சார்ஸ் மற்றும் இபோலா தொடர்­பான கற்­கை­நெ­றிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த ஆய்வு கூடத்­துக்கும் வுஹான் விலங்­குகள் சந்­தைக்­கு­மி­டையே 32 கிலோ­மீற்றர் இடை­வெளி மாத்­தி­ரமே உள்­ளது எனச்  சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

மேலும் வுஹான் கட­லு­ணவு சந்­தை­யா­னது வைரஸ் பர­வு­வ­தற்­கான முக்­கிய இட­மாக விளங்­கி­ய­தாக ஊர்­ஜிதம் செய்­யப்ப்ட்­டுள்ள நிலையில் சகல தரப்­பி­னரும் குறித்த ஆய்வு கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பர­வி­ய­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். எனினும் உறு­தி­யாக எத­னையும் கூற முடி­யாத நிலை­மை­களே இருந்து வரு­கின்­றன. அத்­துடன்  இவை­யாவும் தவ­றான தக­வல்கள் எனவும் கூறு­கின்­றனர்.

உண்­மையில் கொரோனா வைரஸ் சீனா ஆய்வு கூடத்தில் உரு­வாக்­கப்­பட்­டதா என்றால் இது தொடர்பில் விஞ்­ஞான ரீதி­யான ஆதா­ரங்கள் எதுவும்  இல்லை. இதே­வேளை நோய் பாது­காப்பு மத்­திய நிலையம் மற்றும் உலக சுகா­தார நிலையம் என்­பன இச்­செய்­தியின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்­கின்­றன. எனினும் இந் நிறு­வ­னங்­களும் இது­வரை கொரோனா ஓர் உயி­ரியல் ஆயுதம் என கூற­வில்லை. அவர்கள் வுஹா­னி­லுள்ள விலங்­கு­ணவு மற்றும் கட­லு­ணவு சந்­தை­யி­லேயே  இது தொடர்­பான ஆய்­வு­களை மேற்­கொள்­கின்­றனர். அதே­வேளை இது­வரை குறித்த ஆய்வு கூடத்தில் மேற்­படி இரு நிறு­வ­னங்­களும் தமது ஆய்­வு­களை மேற்­கொள்­வில்லை.

இந்த வைரஸ் கன­டாவில் உற்­பத்தி செய்­யப்­பட்­டதா? என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது. குறிப்­பாக கன­டாவில் தேசிய உயி­ரியல் நுண்­ணுயிர் ஆய்வு கூடத்­தி­லி­ருந்தும் மார்ச் 29 ஆம் திகதி மர்மக் கப்­ப­லொன்று புறப்­பட்டு சீனாவை சென்­ற­டைந்­த­தா­கவும் குறித்த கப்­பலில் நோய்க் காவிகள் காணப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. கன­டா­வி­லுள்ள விஞ்­ஞான நிலைய கருத்தின் படி இது ஓர் உயி­ரியல் ஆயுதம் எனவும் 4 மாதங்­க­ளுக்கு பின்னர் சீன உயி­ரி­ய­லா­ளர்கள் குழு­வொன்று (பின்னர் அவர்கள் சீன முக­வர்கள் என அழைக்­கப்­பட்­டனர்) இந்த ஆய்வு। கூடத்­தி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டனர். அவர்கள்  இந்த வைரஸை கடத்­தி­யி­ருக்­க­லா­மெ­னவும் தெரி­வித்­துள்­ளது.  இதனை கனடா மறுத்­துள்­ளது.

அதே­வேளை, மேற்­படி ஆய்வு கூடத்தில் பணி­யாற்­றிய சியாங் கூ சூ என்ற  சீனப்பெண் ஆய்­வாளர் அங்­கி­ருந்தும் கனே­டிய அர­சாங்­கத்தால் வெளி­யேற்­றப்­பட்டார். எனினும் அவர் மீது குற்­றச்­சாட்­டுகள் எவையும்   முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.  இந்த விவ­காரம் தொடர்பில் எதையும் உறு­தி­யாக கூற முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.  அத்­துடன் இக்­கேள்­வி­க­ளுக்கு விடை காண முடி­யாத நிலை­மை­களே  தொடர்­கின்­றன. மறு­புறம்  கொரோனா வைரஸ் தொடர்­பான  செய்திகள் குறித்து சீனா தெளிவாக எதனையும் கூறாத போதிலும் இதனை மறுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. அதாவது அமெரிக்கா கொரோனா வைரஸை வுஹானில் பரப்பியதாகவும் கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம் எனவும் குறிப்பிட்டுள்ளன. 

எவ்வாறெனினும் இச்செய்திகள் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் இந்தக் கேள்விகள் தொடர்ந்தும் எழுந்த வண்ணமே உள்ளன.