வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் யுவதி மற்றும் இரு சிறுமிகளை கடந்த பல நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் உட்பட இரு தந்தையர்களை உறவினரின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று மாலை முறைப்பாடு செய்தமையையடுத்து, பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் வைத்து அவருடைய தந்தை பாலியல் துஸ்பிரயோக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தையை (41) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து குறித்த யுவதியின் தந்தையை (39) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM