கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

இதன்படி, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ‘பீ ‘(B) தரத்திலிருந்து ‘ஏ’ ( A) தரத்திற்குத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர்.

அத்துடன், பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் எம்.சீ.எம்.மாஹீர், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ஆரிப், சாய்ந்தமருது-மாளிகைக்காக ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா, வைத்தியசாலை தாதி உத்தியோத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டர்.