கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை  66,492 ஆகவும்  இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.