ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற மருத்துவ பரிசோதணைகளை தொடர்ந்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டிருந்த நிலையில் அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ்  உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின்  உத­வி­யுடன் கைதுசெய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைதுசெய்யப்பட்டு நீதின்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அவரை நேற்று திடீர் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.