ஜஸ்பிரிட் பும்ரா ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக அவரது திறமை குறித்து சிலர் கேள்விஎழுப்புவது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

நியுசிலாந்திற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பும்ரா விக்கெட்களை வீழ்த்தாது குறித்து விமர்சனங்கள்எழுந்துள்ள நிலையிலேயே சமிஇவ்வாறு கருத்துவெளியிட்டுள்ளார்.

ஒரிரு போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக பல போட்டிகளில் பும்ரா இந்தியாவின் வெற்றிக்காரணமாக அமைந்ததை எப்படி மறக்கமுடியும் என சமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரிரு போட்டிகளில் மாத்திரம் பும்ரா விக்கெட்களை வீழ்த்தாதது  குறித்து நாங்கள் விவாதிக்கின்றோம் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என குறிப்பிட்டுள்ள சமி ஒரு சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லைஎன்பதற்காக போட்டிகளை வெல்லக்கூடிய அவரின் திறமையை  சந்தேகிக்கமுடியாது எனவும் சமி தெரிவித்துள்ளார்.

பும்ரா இந்தியாவிற்காக சாதித்;துள்ளதை எப்படி மறக்கவோ அலட்சியம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சமி நீஙகள் சாதகமாக விதத்தி;ல் சிந்தி;த்தால் அது வீரருக்கும் அணிக்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு வர்ணணைதான் வேலை  என்பதால் அதன் மூலம் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் அவர்களால் விமர்சனங்களை முன்வைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ள சமி எல்லாவிளையாட்டு வீரர்களும் காயமடைவார்கள் சாதகமான விடயங்களை மாத்திரம் பார்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீரர் திடீரென சிறப்பாக விளையாடாவிட்டால் அவரை பற்றிய பார்வைகள்எப்படி மாறுகி;ன்றன என்பது குறித்தும்  சமி ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.