ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , ஏழு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இனந்தெரியாத நபர்களை பொலிஸார் தேடி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்ததோடு அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

 குறித்த பகுதியில் இடம் பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியை பார்க்க பெரும் திரலான மக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

அவர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட துப்பாகி சூட்டிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photography by : made for minds