(ரொபட் அன்­டனி)

இலங்கை தொடர்­பாக   ஐக்­கி­ய­நா­டுகள்  மனித உரிமைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லட்   தயா­ரித்­துள்ள இடைக்­கால அறிக்கை இலங்கை அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜெனிவா தக­வல்கள் தெரி­வித்­தன. அந்­த­வ­கையில் இந்த அறிக்கை தொடர்­பாக  இலங்கை அர­சாங்­கத்தின் பதிலை ஐ.நா.மனித உரிமைகள்  ஆணை­யாளர் அலு­வ­லகம் எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

எதிர்­வரும் 24 ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில்  ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இது­வரை இலங்கை அர­சாங்­க­மா­னது ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்­கைக்கு பதில் அனுப்­ப­வில்லை என   தெரி­ய­வ­ரு­கி­றது.   24 ஆம் திகதி 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் 27ஆம் திக­தி­இ­லங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.   அந்த விவா­தத்தின் போது இலங்கை குறித்த அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் மிச்செல் பச்லட் உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக வெளி­யி­ட­வி­ருக்­கிறார். 

 அறிக்கை சமர்ப்­பிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ள­துடன்   மனித  உரிமை பேரவை உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பான தமது நிலைப்­பாட்டை  அறி­விக்­க­வுள்­ளன.  

2015ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன்   நிறை­வேற்­றப்­பட்ட   30/1  என்ற பிரே­ரணை எவ்­வாறு  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது  என்­பது தொடர்­பா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பொது­வாக ஒரு நாடு தொடர்பில்   ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்  தயா­ரிக்கும் அறிக்­கை­யா­னது அது வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு  முன்­பாக சம்­பந்­தப்­பட்ட ந ாட்டின் பார்­வைக்கு  அனுப்­பப்­ப­டு­வது வழ­மை­யாகும்.  அந்த நாட்டின்  அறிக்கை தொடர்­பான பதிலை பெற்­ற­பின்­னரே அந்த அறிக்கை   மனித உரிமை பேர­வை­யினால் வெளி­யி­டப்­படும்.   இந்த நிலை­யி­லேயே  தற்­போத இலங்கை தொடர்­பான அறிக்­கையை  ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை தூது­த­ரகம் ஊடாக  ஐ.நா. மனித  உரிமை அலு­வ­லகம் இலங்கை  அர­சாங்­கத்­திற்கு அனுப்­பி­வைத்­துள்­ளது. அது தொடர்பில் அர­சாங்­கத்தின் சார்பில்  வெளி­வி­வ­கார அமைச்சு  விரைவில் தமது பதிலை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு அனுப்பி வைக்­க­வி­ருக்­கி­றது. 

கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற இலங்கை தொட­பான 30/1  என்ற பிரே­ர­ணை­யா­னது 2017 ஆம் ஆண்டு 34/1 என்ற தலைப்பில்   இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது.  அதன் பின்னர்   2019ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக 40/1 என்ற  தலைப்பில் நீடிக்­கப்­பட்­டது.  அந்­த­வ­கை­யி­லேயே   இம்­முறை  இலங்­கை­யா­னது இவ்­வாறு   இந்தப் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் விசேட இடைக்கால அறிக்கையை வெளியிடவிருக்கிறார். 

இம்மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமை பேரவையின்  43ஆவது கூட்டத் தொடர்  அடுத்தமாதம்   20 ஆம்திகதி நிறைவடையவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.