இந்திய அணியின் இளம் வீரர்கள் பிரித்வி சா சுப்மன் கில் போன்றவர்களிற்கு வானமே எல்லை என இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடரில் டெஸ்ட் தர வரிசையில் முதலாம் இடத்தில்  உள்ள அணியை போல விளையாடுவதேஎங்கள் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் சம்பியன்சிப் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு எங்களிற்கு 100 புள்ளிகள் தேவை என குறிப்பிட்டுள்ள ரவிசாஸ்திரி நாங்கள் வெளிநாடுகளில் விளையாடவுள்ள ஆறு டெஸ்ட்களில் இரண்டிலாவது வெற்றிபெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக டெஸ்ட் தர பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ள அணி போல விளையாடுவது முக்கியமானது, இந்திய அணியும் அதனையே எதிர்பார்த்துள்ளது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இளம் வீரர்கள் இந்திய அணியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருவது குறித்தும் ரவிசாஸ்திரி மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பிரித்வி சா மற்றும் சுப்மன் கில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இருவரும் மிகச்சிறந்த திறமையை கொண்டுள்ளனர்,என தெரிவித்துள்ள ரவிசாஸ்திரி தங்களிற்கு வானேம எல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சுப்மன் கில் தனித்துவமான திறமையுள்ளவர், துடுப்பாட்டம் குறித்த அவரது அணுகுமுறை இலகுவானது அவர் மிகவும் சாதகமான மனோநிலையை கொண்டவர் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்டில் மயங்கா அகர்வாலுடன் கில் அல்லது பிரித்விசா ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்குவார்கள் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.