கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர் குறித்து  இவ்வாரம் அறிவிக்கப்படும் -  ரஞ்சித் மத்தும பண்டார   

Published By: R. Kalaichelvan

15 Feb, 2020 | 12:00 PM
image

(ஆர்.விதுஷா)

வலுவான கூட்டணி குறித்து அனைத்து தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ள நிலையில் ,கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர்  தொடர்பில் இவ்வாரத்தில் உறுதியாக அறிவிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் அண்மிக்கும் நிலையில்,ஐக்கிய தேசிய கட்சிக்குள் சின்னம் தொடர்பில்  சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பில்  வினவிய போதே அவர் இதனை கேசரி வாரவெளியீட்டிற்கு  தெரிவித்தார்.

தேர்தலில் பொதுக்கூட்டணியாக போட்டியிடுவது என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு முடிவெடுத்திருந்த நிலையில் எந்த சின்னத்தில் களமிறங்குவது என்ற விடயத்தில்  இரு தரப்பிற்கும் இடையில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று ரணில் தரப்பினர் கூறியிருந்த நிலையில், அதற்கு தாம் இணக்கம் தெரிவிப்பதாகவும் , உத்தியோகப்பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சி அந்த சின்னத்தை கையளிக்கும் பட்சத்தில் தாம்  பெற்றுக்கொள்வதாகவும்  சஜித் அணியினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று கூட்டணியின்  சின்னம் தொடர்பில் ,இறுதி முடிவு  எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்து. யானை  சின்னத்திலா , அல்லது அன்னம் சின்னத்திலா அல்லது வேறு  ஏதேனும்  சின்னத்திலா போட்டியிடுவது என்பது தொடர்பிலான தீர்க்கமான முடிவு இவ்வாரத்திற்குள் எடுக்கப்படும் என  கூட்டணியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44