அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களின் அபிலாசை, தேவைகளை நிராகரிப்பதாக அமைந்துள்ளது - குருசாமி சுரேந்திரன்

Published By: Daya

15 Feb, 2020 | 12:12 PM
image

“நிறைவான கிராமம்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மக்களின் அபிலாசைகளையும், அவர்களது தேவைகளையும் நிராகரிப்பதாக அமைந்துள்ளது எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு அதன் பிரகாரம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்குமான ஐந்து மில்லியனில் முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ஒதுக்கப்பட்டு அதனடிப்படையில் மக்களின் தெரிவுகளின் அடிப்படையில் திட்டங்கள் முன்னுரிமைப் படுத்தப்பட்டன. 

அத் திட்டங்களிலிருந்து மக்களால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களை உரிய வகையில் நிர்வாக நெறிமுறைகள் ஊடாக பின்பற்றாமல் அரசியல் தலையீடுகள் காரணமாகத் திட்டங்கள் பின்தள்ளப்பட்டு மக்களால் முன்னுரிமை அளிக்கப்படாத அதே நேரம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் தமது அரசியல் தனிப்பட்ட சுயலாபங்களுக்கும் ஏற்ற திட்டங்கள் முன்னுரிமைப் படுத்தப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இது மக்களின் பங்கேற்பு அபிவிருத்தியையும் அவர்களது அபிவிருத்தி மீதான தேவையையும் புறம் தள்ளுவதாக அமைந்துள்ளது.

மக்களின் முன்னுரிமைப் படுத்தலுக்கு மாறாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அண்மைய நாட்களாக  யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் விவாதங்கள் நடைபெற்று அந்த விவாதங்களின் பிரகாரம் இத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த இழபறிநிலையினால் சிலமாதங்களில்  நாடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலைமையில் குறித்த வேலைகள் தடைப்படுவதற்கும்  நிதி திரும்பிச் செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் உள்ளமையால்  மக்களின் விருப்பங்களுக்கு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அடையாளப் படுத்தப்பட்ட தேவைகள் சார்ந்த திட்டங்களை இதய சுத்தியுடன் நிறைவேற்றப்படவேண்டும்.

யாழ். மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளைத் தேசிய கட்சிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு தற்போது புதிய அரசாங்கத்தில்  மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அதிகாரத்தைப் பெற்றுவிட்டு அதை மக்களுக்குச் சாதமாக அவர்களின் விருப்பிற்கும் முன்னுரிமைக்கும் ஏற்றாற்போல் பயன்படுத்தாமல் தமது அரசியல் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை மக்கள் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை இத்திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் விரைவாக ஒரு கவனத்தினை செலுத்திக் குறித்த திட்டங்களை மீளத் திரும்ப விடாமல் இந்த பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த அந்த பிரதேசங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இதனை உரிய சீர்திருத்தங்களுடன் மாற்றியமைக்க வேண்டும் அத்தோடு இந்த அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்றுள்ள சீர்கேடுகளை உரிய வகையில் விசாரணை செய்து அதற்காக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்கள் போன்றவற்றிற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது மக்களின் வரிப்பணத்தில்  செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் என்றவகையில் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக அவர்களது பிரதேசங்களை மேம்படுத்தக் கூடியதாக  அமைய வேண்டுமே தவிரத்  தனி நபர்களுடைய அல்லது கட்சிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக அமையக்கூடாது. இந்த வேலைத்திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் தான் இடம்பெறுகின்றனவே தவிர ஆட்சிக்கு வரும் எவருடைய தனிப்பட்ட பணத்திலும் அபிவிருத்தி நடைபெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51