நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 30c̊ க்கும் அதிகமான வெப்பநிலை நிலவுவதால், அதிகமாக நீர் அருந்தும்படி சுகாதார அதிகாரிகள்  பரிந்துரைத்துள்ளனர்.

தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்கவும் உடல் குளிர்ச்சியாக பேணவும் அதிக நீர் அருந்தும்படியும் வெயிலில் அதிகநேரம் நிற்பதை தவிர்க்கும்படியும்  சுகாதார அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதே வேளை  கொழும்பு, இரத்மலானை பகுதியில்  கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை 35.5c̊ யாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.