இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பஸ்வண்டியில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் தாளங்குடா பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் மீதே தாளங்குடா பிரதான வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஸ்  சேதமடைந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் பஸ் உரிமையாளர்களே தாக்குதல் நடாத்தியுள்ளதாக பஸ் வண்டி நடத்துனர் தெரிவித்துள்ளார்.