இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு!

Published By: R. Kalaichelvan

15 Feb, 2020 | 10:34 AM
image

யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் சேவைபுரியும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபைக் கிளை மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலகங்கள் ஊடாக நெல் கொள்வு இடம்பெற்றுவருகின்றன.

இந்த திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைவாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தது.

அதற்கமைய அமைச்சரவை அங்கிகாரத்தின் பின்னர் இந்த வருடம் ஜனவரி மாத இறுதி வாரத்தில் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ  விவசாயிகள் எதிர்கொள்ளும் சிறமங்களை குறைக்கும் முகமாக,அவர்களால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்வதற்கான விரைவான ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா  உடனடியாக பிரிகேடியர் ஐ.பி கந்தனஆராச்சியை நெல் பயிர்செய்கை இடம்பெறும் பிரதேசங்களான யாழ்,வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மேற்கு ஆகிய பிரதேசங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் ஒத்துழைப்போடு தங்களது செயற்பாடுகளை விரைவுபடுத்த நியமித்தார்.

இராணுவ தலைமையக தகவலின்பிரிகாரம், புதன் கிழமை 12ஆம் திகதி மாலை வரை ரூபா 209,620,500/= பெறுமதியில் 4,192,410 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற் கொள்வனவில் ‘கீரி சம்பா, சிவப்பு நெல்,பெரிய சிவப்பு நெல் ஆகிய வகைநெல் வகை , நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் மாவட்ட செயலகங்களினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ளன.

(இலங்கை இராணுவ ஊடகம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57