(எம்.மனோசித்ரா)

தலங்கம - குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் இன்று காலை ஐஸ் போதைப்பொருளை ஒத்த போதைப் பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வருகை தந்த மீனவப்படகொன்று திருகோணமலை கடற்பரப்பில் இருந்து 180 மைல் கல் தூரத்தில் மிதந்து கொண்டிருந்த போது கடற்படையினரால் குறித்த போதைப் பொருள் தொகை மீட்க்கப்பட்டுள்ளது. 

குறித்த மீனவப் படகில் ஐஸ் போதைப் பொருள் என்று சந்தேகிக்கப்படும் 3 கிலோ 172 கிராம் போதைப் பொருள் மீட்க்கப்பட்டுள்ளது. 

இவை கடற்படையினரால் தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.