ஐக்கியமாக செயற்பட்டால் பொதுத் தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ளலாம் : நிமல் சிறிபாலடி 

Published By: R. Kalaichelvan

14 Feb, 2020 | 07:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சட்டமா அதிபரை இலகுவில் நீக்க முடியாது. அவ்வாறான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் சின்னம் முக்கியமில்லை. ஐக்கியமாக செயற்பட்டால் பொதுத் தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், 

சட்டமா அதிபர் தொடர்பாக அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. அவரை நீக்கும் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் சட்டமா அதிபரை இலகுவில் நீக்கமுடியாது. அத்துடன் சட்டமா அதிபர் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்றார். அதனால் அவரை இலகுவில் நீக்கமுடியாது.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. அதுதொடர்பில் எந்த பிச்சினையும் இல்லை. மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியுமானவகையில் எமது திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அதுதொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில் அதனை நாங்கள் வெளிப்படுத்துவோம். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் எமக்கு அது சவால் இல்லை. அவர்களுக்குள் ஏற்படும் பிளவை பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லை. எமது வேலைத்திட்டங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெறும் சக்தி எமக்கிருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51