ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்று காலை கைது செய்துள்ள நிலையில் அவரை எதிர்வரும் 17 ஆம் திகதிக வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் இலங்கை ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் வழியாக அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த அவரிடம் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ந நிலையில் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டிருந்தது.

2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ்  உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின்  உத­வி­யுடன் கைதுசெய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைதுசெய்யப்பட்டு நீதின்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.