ஆறு இலட்சம் கடி­தங்கள் தபால் நிலை­யங்­களில் தேக்கம் ஊழி­யர்கள் வேலை­நி­றுத்தம் தொடர்­கி­றது 

Published By: Priyatharshan

15 Jun, 2016 | 09:34 AM
image

நாட­ளா­விய ரீதியில் தபால் திணைக்­கள ஊழி­யர்கள் கடந்த இரண்டு தினங்­க­ளாக மேற்­கொள்ளும் வேலை நிறுத்தப் போராட் டம் கார­ண­மாக ஆறு இலட்­சத்­துக்கும் அதி­க­ மான கடி­தங்கள் பிர­தான தபால் நிலை­யங்­களில் தேங்­கி­யுள்­ளன. 14 முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்து மேற்­கொள்­ளப்­படும் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்டம் இரண்­டா­வது நாளா­கவும் நேற்று தொடர்ந்­தது.

கடந்த 12 ஆம் திகதி நள்­ளி­ரவு ஆரம்­ப­மான இந்த பணிப்பகிஷ்­க­ரிப்பு கார­ண­மாக தற் ­போ­தைக்கு ஆறு இலட்­சத்­துக்கும் அதி­க­மான கடி­தங்கள் கொழும்பு பிர­தான தபால் நிலை­யத்தில் தேங்­கி­யுள்­ளன. இதன் கார­ண­மாக தபால் திணைக்­க­ளத்தின் அன்­றாட அலு­வல்­களில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

தபால் திணைக்­கள ஊழி­யர்கள் சங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களும் தோல்­வி­ய­டைந்­துள்­ளன.

இது தொடர்பில் அச்­சங்­கத்தின் தலைவர் சிந்­தக்க பண்­டார குறிப்­பி­டு­கையில்,

தற்­போது நாடெங்­கி­லி­லு­முள்ள தபால் திணைக்­க­ளத்தில் சுமார் இரண்­டா­யிரம் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை ஏனைய ஊழி­யர்­களின் மேல­திக நேர வேலை­களின் ஊடா­கவே பூர்த்தி செய்து கொள்ள நேரிட்­டுள்­ளது. அத்­தோடு எமது மேல­திக வேலை­நேர கொடுப்­ப­ன­வ­களும் இது­வ­ரை­யிலும் அதி­க­ரிக்­கப்­ப­டா­ம­லுள்­ளன.

இந்­நி­லையில் தபால் திணைக்­கள அதி­கா­ரிகள் ஊழி­யர்­களின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்ப்­பதை விடுத்து, மேல­திக நேரக் கொடுப்­ப­னவை குறைக்க தற்­போது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் நியா­ய­மான தீர்­வினை விரையில் வழங்க் கோரியும் அர­சாங்­கத்தின் பல்­வேறு உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தியும் இது­ரை­யிலும் எவ்­வி­த­மான தீர்க்­க­மான முடி­வு­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

மேலும் நாட­ளா­விய ரீதி­யில்­தொ­ழிற்­படும் தபால் ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்­பா­னது பல­வ­ரு­டக்­கா­ல­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. தபால் திணைக்­க­ளத்­திற்கு இந்த அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அனைத்து வித­மான நிய­ம­னங்­களும் முறைக்­கே­டா­னவை. அர­சா­னது எங்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்­பினை வெகு­வி­ரை­வில்­பெற்று தரு­வ­தோடு எமது கோரிக்­கை­க­ளுக்­கான உரிய தீர்வை பெற்று கொடுக்க வேண்டும். இல்­லையேல் தொடர்ந்தும் எமது தொழிற்­சங்க போராட்­ட­மா­னது முன்­னெ­டுக்­கப்­படும் என்றார்.

இந்­நி­லையில் தபால் பணி­யா­ளர்­களின் பிரச்­சி­னைகள் அமைச்­ச­ரவை கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­லப்­பட்­டுள்­ள­தாக தபால்மா அதிபர் ரோகன அபே­வர்­தன தெரி­வித்­துள்ளார். அத்­துடன் குறித்த பணி­யா­ளர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிட்டுருந்தார்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் தபால்சேவையானது நேற்றும் முற்று முழுவதுமாக செயலழிந்ததோடு வெளிநாட்டு மற்றும் பதிவுத்தபால் சேவைகளும் முற்றுமுழுதாக பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06