(இராஜதுரை ஹஷான்)
உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் என்று வேறுப்படுத்தாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதி, பயிற்சி அடிபபடையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி, விளையாட்டுத்துறை இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திஹகொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
54 ஆயிரம் பட்டதாரிகளுக்கும், குறைந்த வருமானம் பெறும் சாதாரண தர பரீட்சையின் தோல்வியடைந்த ஒரு இலட்ச பேருக்கும் அரச தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி மார்ச் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 01ம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படும். இதனை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடவில்லை. ஆனாலும் பொது விடயங்களை கருத்திற் கொண்டு பல விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM