(இராஜதுரை ஹஷான்)

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி குறித்து  இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.  அனைத்து தரப்பினரது கோரிக்கைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

கூட்டணியில்  பங்குக் கொள்ளும் தரப்பினரது கோரிக்கைகள்  அனைத்தும் நிறைவேற்றப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி தொடர்பில் வினவியபோது இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை மையப்படுத்தி பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் கூட்டணின் ஊடாக குறிப்பிடப்படுகின்றன.

சின்னம், இணைத்தலைமைத்துவம் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

மொட்டு சின்னத்திலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் போட்டியிட வேண்டும். என பொதுஜன பெரமுனவினரும்,    சின்னத்தை மாற்றி பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என  சுதந்திர கட்சியினரும் குறிப்பிட்டுக் கொள்வது கவனத்திற்குரியது.

உத்தேச கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் கருத்துக்கள் குறிப்பிடப்படுபவர்களின் தனிப்பட்ட கருத்தாகும் அவற்றை கட்சிகளின் உத்தியோகப்பூர்வ தீர்மானம் என்று குறிப்பிட முடியாது. பல கட்சிகளை ஒன்றுப்படுத்தி கூட்டணி  அமைக்கும் போது  இறுதியில் தலைமைத்துவத்தின் தீர்மானங்கள்  செயற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.