இரவுநேர விருந்தில் இதயவடிவில் செய்யப்பட்ட அவகாடோக்கள், கப்பல் பணியாளர்களிற்கு இதய வடிவில் செய்திகள், போன்றவற்றின் மத்தியில் பிரிவின் துயரத்தையும் உணரக்கூடியதாக அந்த பகுதி காணப்படுகின்றது.

அந்த இடம் கொரோனா வைரஸ் தொற்றினால் திணறிப்போயிருக்கும் டயமன்ட் பிரின்செஸ் கப்பல்.

நோய் தொற்று அச்சத்திற்கும் மத்தியிலும் இன்றைய காதலர்தினத்தை கப்பலில் உள்ளவர்கள் சாதாரணமாக எடுக்கவில்லை.

சிவப்பு ஆடையணிந்த கப்பலின் பொழுதுபோக்கு முகாமையாளர் நட்டலி  கப்பலில் உள்ளவர்களின்  உணர்வுகள் குலையாமலிருப்பதை உறுதிசெய்வதற்காக டுவிட்டரில் காதலர் தின வீடியோவொன்றைவெளியிட்டுள்ளார்.

நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்திருக்கின்றோம் நான்றாகயிருக்கின்றோம் என்ற செய்தியை தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இது கடந்தஒரு வாரகாலமாக நான் அணியும் ஆடையல்ல என குறிப்பிட்டுள்ளார்.

மட் ஸ்மித் என்ற 57 நபர் கப்பலில் தனது காதலர் தினத்தை மனைவியுடன் கொண்டாடுவதாக தெரிவித்தார்.

எனினும் இந்த விசேடமான நாளிற்கான இடம் இதுவல்ல என அவரது மனைவி ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.

21 வருட திருமணத்திற்கு பின்னர் நான் காதலர் தினத்தை பெரிது படுத்துவதில்லை , நான் வழமையாக எனது மனைவிக்கு வாழ்த்து அட்டையை பரிசாக வழங்குவேன் என மட்ஸ்மித் கப்பலில் இருந்தவாறு ஏஎவ்பீக்கு தெரிவித்துள்ளார்.

வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்ட கப்பலில் காதலர்தினத்தை கொண்டாடுவது குறித்து எனது மனைவிஏமாற்றமடைந்துள்ளது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் கப்பலில் உள்ள பயணிகளிற்கு காதலர் தின சிறப்பு காலை உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கப்பல் சிப்பந்திகள் இன்று விசேடமான காலை உணவு வழங்கப்படும் என நினைவுபடுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தை குறிக்கும்வகையில் இரவு உணவில் பல விசேட உணவுகள் காணப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

காதலர் தினத்திற்கு விடே உணவுகள் என  கப்பலில் ஆறு வயது மகனுடன் தங்கியுள்ள பெண்ணொருவர் பதிவு செய்துள்ளார்.

தனதுமகன் வரைந்த படமொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.  அந்த படத்துடன் உறுதியுடன் இருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் டயமன்ட் பிரின்செஸ் என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன.

இதேவேளை கொரேனா வைரஸ் கப்பலில் பலரை பிரித்து அவர்களிற்கு காதலர் தினத்தன்று பிரிவு துயரை ஏற்படுத்தியுள்ளது.

கென்ட் பிரேசர் என்பவர் தனது பெண் சிநேகிதி ரெபேக்காவை பிரியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொரோனோவைரஸ் தாக்கத்திற்குள்ளான ரெபேக்கா மருத்துவமனையொன்றில்தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாங்கள் குட்பை தெரிவித்தோம்,கட்டியணைத்தோம் ஆனால் முத்தமிடவில்லை ஏனென்றால் என்ன பாதிப்பு என்பது எங்களிற்கு தெரியாது என கென்ட் பிரேசர் தெரிவித்துள்ளார்.