கொரோனா வைரஸானது சீனாவில் ஆறு சுகாதார ஊழியர்களை பலியெடுத்துள்ளதுடன், 1700 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை தாக்கியுள்ளதாக பீஜிங் செய்திச் சேவையொன்று  வெளியிட்டுள்ளது.

முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு கவசகங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயளர்களை கையாளும் போது அல்லது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ ஊழியர்களில் 1,102 பேர் வுஹானிலும், 400 பேர் ஹூபோ மாகாணத்தின் வேறு பிராந்தியங்களிலும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் பிரதியமைச்சர் ஜெங் யிக்சின் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.