மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது அப்பகுதியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாங்குளம் அரச வைத்தியசாலை அதிகாரியொருவர் கடந்த 7ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அன்றைய தினமே மாங்குளம் பொலிஸார் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். உயர் நீதிமன்ற நீதவான் நேற்றைய தினம் திகதி நேரில் சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

நீதவானின் உத்தரவிற்கமைய எலும்புக்கூடுகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 20 வருடம் பழமையானவை என கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.