கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவ ஆயத்தப்பணிகள் பூர்த்திக் கட்டத்தில் உள்ளதாக ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது இலங்கை இந்திய யாத்திரிகர்கள் பத்தாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

மார்ச் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி மார்ச் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் போக்குவரத்து பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடும் மேலும் குறிகட்டுவானிலிருந்து கச்சத்தீவுக்கான ஒருவழிப்பாதை 325 ரூபாவும் நெடுந்தீவில் இருந்து கச்சத்தீவுக்கான 250 ரூபாவும் அறவிடப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடற்போக்குவரத்துதொடர்பில் கடற்படையினரும் ஏனைய விடையங்கள் சார்பில் பிரதேச செயலகம் பிரதேச சபை பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை அனைவருடனும் இணைந்து ஏற்பாடுகள் பூரணப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் , பொலிஸார், இராணுவத்தினர், இந்தியத் துணைத் தூதகர அதிகாரி, பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்ளின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு  நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. 

இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.