அமெரிக்க ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீன் ஒரு தன்னிசேர்க்கையாளர் எனவும் அவர் பல தடவைகள் அந்த விடுதிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவரது முன்னாள் மனைவி சிதோரா தெரிவித்தார். 

அவர் தன்னினசேர்க்கையாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமை தீவிரவாத மத நோக்கிலான தாக்குதலாக நோக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு சிதோரா மறுப்புத் தெரிவித்துள்ளார். 

2013 ஆம் ஆண்டிலிருந்து பல்ஸ் விடுதிக்கு விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டடிருந்த ஓமர் மதீன் இரட்டை வாழ்க்கை வாழும் நிலைக்குள்ளானதாக அவர் கூறினார். 

அவர் த்னினசேர்க்கையாளர்களுக்கு காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் கிறின்டர் மற்றும் ஜக்ட் இணையத்தளங்கள் மூலம் தன்னிசேர்க்கையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி அரட்டையடித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.