வெளியீடுகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு பிரஜைக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படும் என்பதற்கமைய ஊடக சுதந்திரத்தினை உறுதியளிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களை வரவேற்பதாக உலகின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனம் (WAN-IFRA) தெரிவித்துள்ளது.
அத்தோடு தற்போதைய ஆட்சியில் ஊடகங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவற்றுக்கு உண்மைகளை எழுத சுதந்திரம் இருப்பதாகவும் அளித்த உறுதி மொழிகளை ஆர்வத்துடன் வரவேற்பதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பத்திரிகை நிறுவனமான வான் இஃப்ராவின் பிரதம நிறைவேற்று அதிகாரி வின்சென்ட் பெரீன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
இலங்கை மக்களின் பெரும் ஆணையுடன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றோம். பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடக பிரதானிகளுடன் நீங்கள் நடாத்திய பல சந்திப்புக்களில் ஊடகங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவற்றுக்கு உண்மைகளை எழுத சுதந்திரம் இருப்பதாகவும் நீங்கள் அளித்த உறுதி மொழிகளை நாங்கம் ஆர்வத்துடன் அவதானித்துள்ளோம்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய பத்திரிகை அமைப்பான நாம், இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 14(1)(அ) இல் கூறப்பட்டுள்ள ' வெளியீடுகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு பிரஜைக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படும் ' என்பதற்கமையவே ஊடக சுதந்திரத்தினை உறுதியளிக்கும் வகையில் வெளியிட்ட உங்களது அறிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
வெளியீட்டாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை சிறையிலிடும் பத்திரிகை பேரவைச் சட்டம் போன்ற சட்டங்களை விட சுதந்திர உலகில், ஜனநாயக அரசாங்கத்தின் சுய கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பத்திரிகைகளை ஒழுங்குமுறைப்படுத்த அவ் அரசாங்கங்கள் அனுமதித்துள்ளன என்பதனை சுட்டிக்காட்ட கூடியதாகவுள்ளது. இலங்கையில் சுய கட்டுப்பாடு என்ற கருத்தினை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM