உல­க­ளா­விய ரீதியில் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கொரோனா வைர­ஸா­னது  வௌவால்­களில் தோன்றி  சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்­யப்­படும் விலங்­குகள் மூலம் மனி­த­ருக்கு பர­வி­யுள்­ள­தாக ஏற்­க­னவே விஞ்­ஞா­னி­களால் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளமை அனை­வரும் அறிந்­த­தாகும்.

 ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் ஒன்­றாக விளங்கும் இந்தோனேசியாவிலுள்ள சந்­தை­களில் வௌவால்கள், பாம்­புகள் உள்­ள­டங்­க­லான பிரா­ணிகள் தொடர்ந்து உண­வுக்­காக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

சுல­வேஸி தீவி­லுள்ள தொமோஹொன் எக்ஸ்றீம் இறைச்சி சந்தை நிர்­வா­கத்­தினர் தெரி­விக்­கையில்,  தமது சந்­தையில் வர்த்­தகம் சிறப்­பாக இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தாம் விற்கும் வன விலங்­கு­களின் இறைச்­சி­களை  கொள்வ­னவு செய்ய சுற்­றுலாப் பய­ணிகள் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்­ள­தா­கவும் கூறு­கின்­றனர்.

அந்த சந்­தையில் வௌவால் இறைச்­சியை விற்கும் ஸ்ரென்லி திம்­புலெங் கூறு­கையில், தனது சந்­தையில் தொடர்ந்து வியா­பாரம் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்  தான் விற்­ப­னைக்கு வைக்கும் வௌவால் இறைச்­சிகள் முழு­மை­யாக விற்றுத் தீர்ந்­து­வி­டு­வது வழ­மை­யா­க­வுள்­ள­தா­கவும்   தெரி­வித்­துள்ளார்.

 தான்  விழாக் காலங்­களில் தின­சரி 50 முதல் 60 வௌவால்­களை விற்­ப­தாகத் தெரி­வித்த அவர், தனக்கு வௌவால் விற்­ பனை மூலம் 60,000 ரூபியா வரை பணம் கிடைப்­ப­தாகக் கூறினார்.

வட சுலவெஸி தீவி­லுள்ள மின­ஹஸன் மக்கள் தமது பாரம்­ப­ரிய உண­வாக வௌவால் இறைச்­சி­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­படும் பானிகி என்ற கறி உணவை உண்டு வரு­கின்­றனர்.

மேற்­படி உணவுத் தயா­ரிப்பின்போது துர்­ம­ணத்தைத் தவிர்க்க முத­லா­வ­தாக வௌவால்­களின் அக்­குள்­க­ளிலும் கழுத்­தி­லு­முள்ள சுரப்­பிகள் அகற்­றப்­ப­டு­கின்­றன. அதன் பின் வௌவாலின் உட­லி­லுள்ள  ரோமத்தை அகற்ற அந்த உடல் நெருப்பில் வாட்டப்படுகிறது.

தொடர்ந்து பெறப்படும் வௌவால் இறைச்சி சுத்திகரிக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்டு மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கறியாக சமைக்கப்படுகிறது.