மிலேனியத்தின் பின்னரான எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பில், சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா இலங்கைக்கு ஒரு பங்காளராக இருக்க முடியும் என்று இந்தியாவின் பதில் உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தி மன்றத்தின் - இலங்கைப் பீடத்தின் மூன்றாவது அமர்வு வியாழக்கிழமை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்தியா, அண்மையில் உலகின் மிகப் பெரிய சூரிய மின்கல பூங்காவை கர்நாடகாவில் ஸ்தாபித்துள்ளது. பசுமை சக்தி மூலங்களுக்கான உறுதிப்பாட்டை காண்பிக்கும் வகையில், 2020–-21ஆம் ஆண்டில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறைக்கு இந்திய அரசு தனது புதிய வரவு செலவுத்திட்டத்தில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
சர்வதேச சூரிய மின்கல அமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்கவைகளில் கவனம் செலுத்தும் பல முக்கியமான முன்னெடுப்புகளில் இலங்கையும் இந்தியாவும் ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இலங்கையில் சூரிய மின்கல திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை நிதியையும் வழங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தித்துறை உட்பட பல்வேறு துறைகளில் இளம் புலமையாளர்களுக்கு இந்திய அரசால் முழுமையான நிதி அனுசரணையுடன் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள் உள்ளன. இந்தியாவின் குர்கோனில் உள்ள தேசிய சூரியக்கல நிறுவனம், சென்னையிலுள்ள தேசிய காற்றாலை சக்தி நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் பெயார்புட் கல்லூரி உட்பட பல நிலையங்களில் இந்தியா முழுவதும் இந்த வாய்ப்புகள் காணப்படும் நிலையில் இலங்கையர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மிலேனியத்தின் பின்னரான எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பில், சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா இலங்கைக்கு ஒரு பங்காளராக இருக்க முடியும் என்றார்.
மின்வலு, எரிசக்தி மற்றும் போக்கு வரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இந்தியா, இலங்கை, பிற நாடுகளைச் சேர்ந்த தொழில் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM