கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மிருகங்களுக்கும் முகக்கவசம் அணிவித்து மக்கள் விழிப்புடன்  செயற்படுக்கின்றனர்.

அந்த வகையில் சீனாவில் செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் நோக்கில் மூகமுடிகளை அணிய வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு செல்லப் பிராணிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது மக்களுக்கும் பரவுமென மக்கள் அச்சம் கொள்வதால் அவர்கள் மிருகங்களுக்கு முகமூடிகளை அணிவித்துள்ளனர்.

அதேவேளை கைகளால் செய்யப்பட்ட முகமூடிகளை மிருகங்களுக்கு அணிவித்தது, பொது இடங்களில் அழைத்துச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில் குறித்த முகமூடிகளைப் பயன்படுத்தி மிருகங்களின் முகத்தை மறைத்துள்ளதோடு , கண்கள் தெரிவது போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செல்லப் பிராணிகளான நாய் , பூனை போன்ற மிருகங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் தாக்கம் ஏற்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும் , செல்லப்பிராணிகளை தொட்டவுடன் சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுவது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு கொரோனா தொற்று உள்ள ஒருவர் அல்லது அறிகுறிகள் காணப்படும் நபர் என எவருடனும் செல்லப்பிராணிகள் நெருங்கி காணப்பட்டால் அவைகளுக்கும் தாக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

செல்லப்பிராணிகளிடம் இருந்து சற்று விலகியிருப்பதோடு,  அவதானமாக செயல்பட வேண்டுமெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வுஹானில் சுமார் 50 ஆயிரம் செல்லப்பிராணிகள் வீதிகளில் பசி பட்டனியோடு அலைவதாக அண்மையில் சமூக ஆர்வாலர்கள் தெரிவித்திருந்தனர்.

இதில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பிராணிகளை பசி , பட்டினியில் இருந்து மீட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே மிருகங்களை பாதுகாக்கும் நோக்கோடு செல்லப்பிராணிகளுக்கான முகமூடிகளை சீனா உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photography by  : Daily Express