தினசரி உணவில் முழு தானிய உணவுகளை உட்கொள்வது இருதய நோயால் மரணமடையும் அபாயத்தை நான்கில் ஒரு பகுதியால் குறைப்பதாக புதிய பிரதான ஆய்வொன்று தெரிவிக்கிறதுமுழு கோதுமை பாஸ்தா உணவு அல்லது சிவப்பு அரிசியை தினசரி சிறிய அளவில் உண்பதே மேற்படி இருதய நோயால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க உதவும் என அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முழுமையான தானிய உணவுகளை உண்ணும் மக்கள் நீண்ட காலம் வாழ்வதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

சில முழு தானிய வகைகள் சீனியைக் கொண்டிருப்பதால் அவை நமது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்ற போதும், பாண், அரிசி மற்றும் சீரியல் உணவு வகைகள் என்பவற்றில் சீனி மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பதனிடப்படாத காபோவைதரேற்று போதுமான புரதம், நச்சு எதிர்ப்புப் பொருட்கள் மற்றும் விற்றமின்களைக் கொண்டிருப்தால் ஜீரணம், உடல் நிறை குறைப்பு என்பவற்றை ஊக்குவித்து இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இந்த ஆய்வானது ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பாடசாலையால் 800,000 வயதுவந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.